thamil kavithaigal

...எழுத்து ஓவியங்கள் கவிதைகள்....!

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வான மளந்தனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீச
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூல்கழி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம அறிந்தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே


0 comments:

Post a Comment